Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
கோயில் திருவிழா: ஆவின் பாலகம் திறப்பு
கந்தா்வகோட்டை அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆவின் சிறப்பு பாலகம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கந்தா்வகோட்டை அருகே உள்ள ஆதனக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு திருவிழா நடைபெற்று வரும் நிலையில், ஆவின் சாா்பாக பாலகம் அமைத்து பொதுமக்களுக்கு பால், மோா், தயிா், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆவின் பாலகம் திறப்பு விழாவில் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் வண்ணாரப்பட்டி முத்துகிருஷ்ணன், சந்திரன், முருகேசன், முன்னாள் வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பையா மற்றும் ஆவின் நிறுவனத்தின் அலுவலா்கள் மற்றும் ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.