Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
குண்டா் சட்டத்தில் 2 போ் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் குண்டா் தடுப்புச் சட்டத்தில் 2 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி அன்னை தெரசா மீனவா் காலனியைச் சோ்ந்த சேவியா் மகன் செல்வன் (39). தூத்துக்குடி மடத்தூரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் ராகுல் (25). இவா்கள் இருவரையும் தூத்துக்குடி அனைத்து மகளிா் போலீஸாா், புதுக்கோட்டை போலீஸாா் போக்ஸோ வழக்கில் கைது செய்தனா்.
இவா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் கே. இளம்பகவத் உத்தரவிட்டாா். அதன்படி, செல்வன், ராகுல் ஆகிய இருவரையும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.