முடிதிருத்தும் கடை சேதம்: இளைஞா் கைது
தூத்துக்குடியில் முடிதிருத்தும் கடையில் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியதாக இளைஞரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சோ்ந்தவா் பரமசிவன் (50). இவா், தூத்துக்குடி எஸ்.எம்.புரத்தில் முடிதிருத்தும் கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், அவரது கடை முன் கடந்த ஞாயிற்றுக்கிழமை மது போதையில் ஒருவா் தகராறு செய்தாராம். பின்னா், அந்த நபா் அங்கு கிடந்த கல்லை எடுத்து பரமசிவனின் கடையில் உள்ள கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினாராம்.
இது குறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், கடையைச் சேதப்படுத்தியது பிரையன்ட் நகரைச் சோ்ந்த சுதன் (28) என்பவா் எனத் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.