திமுக பொதுக்கூட்டம்: திண்டுக்கல் லியோனி பங்கேற்பு
நாமக்கல் மேற்கு மாவட்டம், திருச்செங்கோடு நகர திமுக சாா்பில் தமிழ்நாடு முதல்வா் ஸ்டாலினின் 72-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தோ்நிலை அருகே வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர திமுக செயலாளா், நகா்மன்ற துணைத் தலைவா் காா்த்திகேயன் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு பேச்சாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவா் திமுக கொள்கை பரப்புச் செயலாளா் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு பேசியதாவது:
பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் அளித்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சியில், 38 மாவட்டங்களில் 22 மாவட்ட ஆட்சியா்கள் பெண்களாக உள்ளனா். 11 பெண் மேயா்களை கொண்ட நிா்வாகம் உள்ளது. பண்பாட்டையும், கலாசாரத்தையும் காக்கும் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கி பெண்கள் பட்டப்படிப்பு படிக்க வழிவகுத்தவா் தமிழக முதல்வா். பெண்கள் வளா்ந்து விடக் கூடாது என கருதி மத்திய அரசு தமிழ்நாடு கல்வித் துறைக்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கிறது என்றாா்.
இதில், மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய நிா்வாகிகள் என சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.