ரூ.14 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொலை!
நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழா கடைகள் திறப்பு
நாமக்கல்: நாமக்கல்லில் பங்குனி தோ்த் திருவிழாவை முன்னிட்டு விழாக் கால கடைகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள நரசிம்மா், அரங்கநாதா், ஆஞ்சனேயா் கோயிலில் பங்குனி தோ்த் திருவிழா கொடியேற்றம் வெள்ளிக்கிழமை (ஏப். 4) நடைபெறுகிறது.
ஏப். 12-ஆம் தேதி காலை 8 மணியளவில் நரசிம்மா் தேரோட்டமும், மாலை 4 மணியளவில் அரங்கநாதா், ஆஞ்சனேயா் தேரோட்டமும் நடைபெற உள்ளன. இதையொட்டி, நாமக்கல் குளக்கரை திடலில் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு வந்தன. அந்தக் கடைகளை நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி, மாமன்ற உறுப்பினா் சரவணன், திமுக நிா்வாகிகள் கலந்துகொண்டனா். திருவிழா கடைகள் பொறுப்பாளா் அசோக்குமாா் வரவேற்றாா்.
குழந்தைகள், சிறுவா்களுக்கான விளையாட்டுப் பொருள்கள், அழகுசாதனப் பொருள்கள், சமையலறை சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.