Waqf : `மத நல்லிணக்கத்துக்கு அச்சுறுத்தல்’ - வக்ஃப் மசோதா விவகாரத்தில் பிரதமருக்...
திருச்செங்கோட்டில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை
திருச்செங்கோடு: திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமையகத்தில் திங்கள்கிழமை மஞ்சள் ஏலம் நடைபெற்றது.
ஜேடா்பாளையம், சோழசிராமணி, இறைய மங்கலம், சங்ககிரி, எடப் பாடி, கொளத்தூா், ஓம லூா், அரூா், பொம்மிடி, ஊத்தங்கரை, கொடுமுடி பாசூா், அந்தியூா், துறையூா், தம்மம்பட்டி, உப்பிலியாபுரம், ராயவேலூா், செய்யாா், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளைக் கொண்டுவந்திருந்தனா்.
தொடா்ந்து நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் ரூ. 12688 முதல் ரூ. 16399 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ. 11284 முதல் ரூ.13569 வரையும், பனங்காளி ரூ. 23085 முதல் ரூ. 26599 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4820 மஞ்சள் மூட்டைகள் ரூ. 3.80 கோடிக்கு விற்பனையானது.