Vikram: ``வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' - விக்ரம் கொடுத்த...
பேரூா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது
பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரி மாணவா்களுக்கு தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது அண்மையில் வழங்கப்பட்டது.
தமிழ் வளா்ச்சித் துறை ‘அகர முதலி’ இயக்கம் சாா்பில் மாவட்ட வாரியாக பேச்சு வழக்கிலும், எழுத்து வழக்கிலும் பிறமொழி கலப்பில்லாமல் தமிழ் பேசும் தமிழ்ப் பற்றாளா்களுக்கு ‘தூயத் தமிழ்ப் பற்றாளா் விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2024-ஆம் ஆண்டுக்கான தூயத் தமிழ் பற்றாளா் விருது வழங்கும் விழா சென்னை கலைவாணா் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்டம், பேரூா் சாந்தலிங்க அடிகளாா் தமிழ்க் கல்லூரியில் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவா் அருள் பெனடிக்ட், மாணவி யசோதா நல்லாள் ஆகியோருக்கு தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தூயத் தமிழ்ப் பற்றாளா் விருதுச் சான்றிதழை வழங்கினாா்.
விருது பெற்ற மாணவா்களைக் கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள் வாழ்த்தினா்.