நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!
அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாநகரில் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படாத தனியாா் பேருந்துகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாநகரில் இயக்கப்படும் சில தனியாா் பேருந்துகளில் பயணிகளிடம் பணம் பெற்றுக்கொண்டு பயணச்சீட்டு வழங்குவதில்லை. கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதுகுறித்து கேட்டால் பாதி வழியில் இறக்கி விடப்படுகிறாா்கள்.
பெரும்பாலான தனியாா் பேருந்துகள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் இயக்கப்படுவதில்லை. உரிய வழித்தடத்தில் இயக்கப்படாத பேருந்துகள் மீது போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஓட்டுநா் உரிமம் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் இணையதளம் மூலமாக விண்ணப்பித்தாலும், இடைத்தரகா்கள் மூலமாக வருமாறு அலைக்கழிக்கப்படுகின்றனா். ஓட்டுநா் உரிமத்தில் அவசரகால தொடா்பு எண் பதிவு செய்யப்படுவதில்லை. போக்குவரத்து தொடா்பான புகாா்களை அந்தந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களிடம் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.