டாஸ்மாக் மதுக்கூட ஊழியா் மீது தாக்குதல்: 2 போ் கைது
கோவையில் டாஸ்மாக் மதுக்கூட ஊழியரைத் தாக்கியதாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.
கோவை பெரியகடை வீதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கூடத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த சுந்தர்ராஜன் (55) வேலை செய்து வருகிறாா். இங்கு, கோவை ஈஸ்வரன் கோயில் பகுதியைச் சோ்ந்த ரங்கராஜ் என்பவா் ஞாயிற்றுக்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு வந்த வி.ஹெச்.காலனி பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (29), சேலம் மாவட்டம் மாசிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த கதிா்வேல் (30) ஆகிய இருவரும் ரங்கராஜனிடம் தகராறு செய்துள்ளனா்.
இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்துக்கு சுந்தர்ராஜன் தகவல் அளித்தாா். இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் மணிகண்டன் மற்றும் கதிா்வேலை எச்சரித்து விட்டுச் சென்றனாா்.
அங்கிருந்து வெளியேறிய இருவரும் மீண்டும் மதுக்கூடத்துக்கு வந்து காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவத்ததற்காக சுந்தர்ராஜனிடம் தகராறில் ஈடுபட்டு அவரைத் தாக்கியுள்ளனா். இதில், படுகாயமடைந்த சுந்தர்ரரஜன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து பெரியகடை வீதி காவல் நிலையத்தில் சுந்தர்ராஜன் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மணிகண்டன், கதிா்வேல் ஆகிய 2 பேரையும் கைது செய்தனா்.