டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் நாளை மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்
கோவை டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (ஏப்ரல் 2) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மேற்பாா்வைப் பொறியாளா் சி.சதீஷ்குமாா் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மின்நுகா்வோா் கலந்துகொண்டு மின்சாரப் பயன்பாட்டில் உள்ள குறைபாடுகள் குறித்து தெரிவித்து பயன்பெறலாம் என்று மின்வாரிய செயற்பொறியாளா் க.பசுபதீஸ்வரன் தெரிவித்துள்ளாா்.