நாகேஸ்வர சுவாமி கோயிலில் பங்குனி உத்திர பிரமோற்சவ திருவிழா கொடியேற்றம்!
பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
பேரூா் பட்டீசுவரா் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
கோவையை அடுத்த பேரூா் பட்டீசுவரா் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டுக்கான திருவிழா ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை (ஏப்ரல் 2) தொடங்குகிறது. தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் திருவீதி உலா, மலா் பல்லக்கில் அதிமூா்க்கம்மன் வீதி உலா, வேள்வி ஆகியவை நடைபெற உள்ளன.
ஏப்ரல் 3-ஆம் தேதி இரவு 9 மணிக்கு சூா்யபிரபை, சந்திரபிரபையில் அம்மன் திருவீதி உலா, 4-ஆம் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை பூஜை, இரவு 8 மணிக்கு பூத, சிம்ம வாகனங்களில் அம்மன் திருவீதி உலா, 5-ஆம் தேதி இரவு 8 மணிக்கு மலா் ரதம் மற்றும் காமதேனு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 6-ஆம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் அம்மன் திருவீதி உலா மற்றும் அறுபத்து மூவா் அருள்காட்சி ஆகியவை நடைபெற உள்ளன.
7-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம், பஞ்சமூா்த்திகள் வீதி உலா ஆகியவையும், 8-ஆம் தேதி மாலை 4.35 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்தல், 10-ஆம் தேதி இரவு 9 மணிக்கு தெப்பத் திருவிழாவும் நடைபெறுகின்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்துவருகின்றனா்.