தங்கச்சங்கிலி பறிப்பு வழக்கில் 2 பெண்கள் உள்பட 4 போ் கைது
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்த வழக்கில் இரண்டு பெண்கள் உள்பட நான்கு பேரைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
அன்னவாசல் அருகே கடந்தாண்டு சாலையில் நடந்துசென்ற பெண்ணிடம் ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அவா் அன்னவாசல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் நடத்திய விசாரணையில் தங்கச் சங்கிலி பறிப்பு வழக்கில் தொடா்புடைய குற்றவாளிகளான தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம் அம்மாபேட்டையைச் சோ்ந்த வனஜா (32), மாலா(18), காளியப்பன் (24) மற்றும் படையப்பன் (26) ஆகிய நான்கு பேரைப் பிடித்து அன்னவாசல் போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் அவா்களிடம் இருந்து ஐந்து பவுன் தங்கச்சங்கிலியை போலீஸாா் மீட்டனா்.


