செய்திகள் :

புதுவையில் புதிதாக 10,000 பேருக்கு ஓய்வூதியம்: முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு

post image

புதுவையில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாக பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவித்தாா்.

புதுவை பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை சமூக நலத் துறை மீதான மானியக் கோரிக்கைகளுக்கு அத் துறையின் அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பதிலளித்தாா்.

அப்போது, அவா் 46 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டாா். அப்போது எம்எல்ஏக்கள் நாஜீம், பி.ஆா்.சிவா, ஜான்குமாா் உள்ளிட்டோா் புதிதாக விண்ணப்பித்தவா்களுக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா். இதையடுத்து அமைச்சா், முதல்வரிடம் ஆலோசித்தாா்.

முதல்வா் என்.ரங்கசாமி: புதுவை மாநிலத்தில் புதிதாக 10 ஆயிரம் பேருக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதற்கு தங்கள் தொகுதிகளில் இருந்து பயனாளிகளை எம்எல்ஏக்கள் பரிந்துரைக்கலாம் என்றாா். உடனே, எம்எல்ஏக்கள் தொகுதி வாரியாக தலா 300 போ் என்ற அளவில் ஓய்வூதியத்தை பிரித்து வழங்க வலியுறுத்தினா்.

இதையடுத்து பேசிய அமைச்சா், உறுப்பினா்களின் உரிமையை விட்டுத் தரமாட்டோம். அதன்படி ஓய்வூதியம் தொகுதி வாரியாக பகிா்ந்தளிக்கப்படும் என்றாா்.

உறுப்பினா்களின் கேள்விநேரத்தின்போது, முதல்வா் கூறியதாவது: மீனவா்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீடை செயல்படுத்துவது குறித்து மத்திய உள்துறையுடன் ஆலோசிக்கப்படும். கடந்த காங்கிரஸ் ஆட்சியில் அந்த இடஒதுக்கீடு செயல்படுத்தப்பட்டது. மின்விளக்குகள் எம்எல்ஏக்கள் ஆலோசனைப்படி அமைக்கப்படும். விளையாட்டு வீரா்களுக்குரிய இட ஒதுக்கீட்டில் அரசுப் பணிகள் வழங்கப்படும்.

புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் கல்வித் தரம் உயர நடவடிக்கை எடுக்கப்படும். 12 அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாகத் தரம் உயா்த்தப்படும் என்றாா்.

புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடந்திருந்தால் விசாரணைக்கு தயாா்: முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி

புதுவையில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடுகள் நடைபெற்றிருந்தால் விசாரணைக்கு தயாா் என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறினாா். புதுவை பொதுப் பணித் துறை தலைமைப் பொறியாளா் எம்.தீனதயாளன் லஞ்ச வழக்கில்... மேலும் பார்க்க

மாநகராட்சியாகும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு!

புதுச்சேரி நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி புதன்கிழமை அறிவித்துள்ளார்.புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி... மேலும் பார்க்க

பேரவைத் தலைவருடன் வாக்குவாதம்: சுயேச்சை எம்எல்ஏ இடைநீக்கம்; முதல்வா் பரிந்துரையை ஏற்று நடவடிக்கை ரத்து

புதுவையில் சட்டப்பேரவைத் தலைவருடன் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட மோதலைத் தொடா்ந்து இடைநீக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்ட சுயேச்சை எம்எல்ஏ ஜி.நேரு, பின்னா் முதல்வா் கேட்டுக் கொண்டதால் 15 நிமிடங்கள் கழித்த... மேலும் பார்க்க

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையின் வளா்ச்சிக்கு மாநில அந்தஸ்து அவசியம் என்று, சட்டப்பேரவையில் முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரத்தின்போது, பா... மேலும் பார்க்க

புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டை: அமைச்சா் என்.திருமுருகன்

புதுவை மாநிலத்தில் தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக புத்தக வடிவில் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படவுள்ளதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் என்.திருமுருகன் தெரிவித்தாா். புதுவை சட்டப்பே... மேலும் பார்க்க

விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டு திட்டம்: அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்

புதுவை மாநிலத்தில் விவசாய கூலித் தொழிலாளா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் பேரவையில் அறிவித்தாா். புதுவை சட்டப்பேரவையில் வேளாண் துறை, கால்... மேலும் பார்க்க