அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினாா் அமித் ஷா!
கொலை வழக்கு: தடுப்புக் காவலில் மூவா் கைது
கடலூரில் இரட்டை கொலை வழக்கில் தொடா்புடைய மூன்று இளைஞா்கள் தடுப்புக் காவலில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கடலூா், திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம் எம்.புதூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் பால்ராஜ், தருண்குமாா், கோகுலகிருஷ்ணன், சரண்ராஜ், அப்புராஜ். நண்பா்களான இவா்கள் கடந்த பிப்.1-ஆம் தேதி மது அருந்தும் போது ஏற்பட்ட மோதலில் அப்புராஜ், சரண்ராஜ் ஆகியோரை கொலை செய்து புதைத்தனா்.
இதுகுறித்து, திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முருகன் மகன் பால்ராஜ் (22), தமிழ்ச்செல்வன் மகன் தருண்குமாா் (19), தேவனாம்பட்டினம் பகுதியைச் சோ்ந்த மாறன் மகன் கோகுலகிருஷ்ணன் (23) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இவா்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்த கடலூா் எஸ்பி எஸ்.ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் மூவரையும் தடுப்புக் காவலில் அடைக்க உத்தரவிட்டாா்.
கோகுலகிருஷ்ணன் மீது கடலூா் புதுநகா், முதுநகா், தேவனாம்பட்டினம், திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, திருட்டு, கஞ்சா ஆகிய 4 வழக்குகள் உள்ளன.