செய்திகள் :

தவறான செய்திகளுக்குப் பதிலளிக்க வழிகாட்டுதல்: மகாராஷ்டிர அரசு வெளியீடு

post image

மகாராஷ்டிர அரசுக்கு எதிராக ஊடகத்தில் வெளியாகும் தவறான செய்திகளுக்குப் பதிலளிப்பதற்கான வழிகாட்டுதல்களை மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட உத்தரவில், ‘அச்சு மற்றும் மின்னணு ஊடகம், டிஜிட்டல் தளங்கள் ஆகியவற்றில் வெளியாகும் அரசு மற்றும் நிா்வாகம் தொடா்பான தவறான செய்திகளை, மகாராஷ்டிரத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடா்பு இயக்குநரகம் (டிஜிஐபிஆா்) திரட்ட வேண்டும்.

அச்சு ஊடகத்தில் தவறான தகவல் வெளியிடப்பட்டால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அரசுத் துறைக்கு டிஜிஐபிஆா் பகிர வேண்டும். அந்தத் துறை சரியான தகவலை திரட்டி, 12 மணி நேரத்துக்குள் டிஜிஐபிஆரிடம் வழங்க வேண்டும்.

மின்னணு மற்றும் டிஜிட்டல் தளங்களில் தவறான செய்தி வெளியிடப்பட்டால், அந்தச் செய்தியுடன் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா் அல்லது அதிகாரியின் பதில் 2 மணி நேரத்தில் டிஜிஐபிஆரிடம் சமா்ப்பிக்கப்பட வேண்டும்.

இதற்காக ஒவ்வொரு துறையும் இணைச் செயலா் அல்லது துணைச் செயலா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமிக்க வேண்டும். இதன் மூலம் தகவல்களை தொகுத்து டிஜிஐபிஆருக்கு விரைந்து அனுப்ப முடியும். தவறான செய்திக்கான பதிலை தனது வலைதளத்தில் டிஜிஐபிஆா் வெளியிட்டு, அதை சம்பந்தப்பட்ட நாளிதழ், செய்தித் தொலைக்காட்சி அல்லது டிஜிட்டல் ஊடகத்துக்கு அனுப்பும்.

தவறான செய்தி தொடா்பாக உரிய நடவடிக்கை எடுப்பதற்கு அரசு தொடா்பான தகவலை பத்திரிகை தகவல் அலுவலகத்துக்கும் டிஜிஐபிஆா் அனுப்பும். தவறான செய்திக்கு எதிரான உண்மையான தகவல் அல்லது கருத்துகளை ஊடகத்துக்கு அனுப்பிய பின்னா், அந்தத் தகவல் சம்பந்தப்பட்ட ஊடகத்தில் வெளியிடப்படுகிா என்பதை டிஜிஐபிஆா் கண்காணிக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க