பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்
மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா்.
மெஹ்சானா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட தனியாா் நிறுவன பயிற்சி விமானம், அந்த மாவட்டத்தின் உஜா்பி கிராமத்தில் உள்ள நிலப் பகுதியில் தொழில்நுட்பக் கோளாறால் கீழே விழுந்தது. இதில் பயணித்த பெண் விமானிக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக விமான நிலையம் மற்றும் விமான இயக்குநரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது என மெஹ்சானா காவல் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.