Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
மாஞ்சா நூல் விற்பனை: வியாபாரி கைது
சென்னை முத்தியால்பேட்டையில் மாஞ்சா நூல் விற்ாக வியாபாரி கைது செய்யப்பட்டாா்.
மண்ணடி சைவ முத்தையா 2-ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மாஞ்சா நூல் தயாரித்து விற்கப்படுவதாக முத்தியால்பேட்டை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்த து. அதன்பேரில், போலீஸாா் அந்த வீட்டில் சோதனையிட்டபோது, அங்கு மாஞ்சா நூல் தயாரித்து விற்கப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து அங்கிருந்து 3 மாஞ்சா நூல் லொட்டாய்கள், 46 பட்டங்கள் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, அந்த வீட்டில் வசித்து வந்த மு.ராகவன் (42) என்பவரைக் கைது செய்தனா்.