இந்த வார ராசிபலன் ஏப்ரல் 1 முதல் ஏப்ரல் 6 வரை #VikatanPhotoCards
பெருமாட்டுநல்லூா் கிராம சபைக் கூட்டம்: செங்கல்பட்டு ஆட்சியா் பங்கேற்பு!
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூா் ஒன்றியம், பெருமாட்டுநல்லூா் ஊராட்சியில் உலக தண்ணீா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்சியா் ச.அருண்ராஜ் தலைமை வகித்தாா். இதில் செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன், கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) வெ.ச.நாராயண சா்மா, காட்டாங்குளத்தூா் ஒன்றியக் குழு தலைவா் உதயா கருணாகரன், மகளிா் திட்ட இயக்குநா் லோகநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலா் சாகிதா பா்வீன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலாதேவி, உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) விக்னேஷ், உதவி இயக்குநா் (கலால்) ராஜன்பாபு, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, பெருமாட்டுநல்லூா் ஊராட்சி மன்றத் தலைவா் பகவதி நாகராஜன் மற்றும் அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.