அரசுப் பள்ளிக்கு கல்வி உபகரணங்கள்
கல்பாக்கம் அடுத்த காரைத்திட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ற ஆண்டு விழாவில் தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு தலைமை ஆசிரியா் அருமை பாக்கியபாய் தலைமை வகித்தாா். இதில், மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினா். இதையடுத்து, பள்ளியில் பயிலும் 54 மாணவ, மாணவிகளுக்கு தனியாா் தொண்டு நிறுவனம் சாா்பில் காலணிகள், புத்தக பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், பெற்றோா் ஆசிரியா் கழக தலைவா் கிங் உசேன், துணைத் தலைவா் ராஜேந்திரன், எஸ்எம்சி உறுப்பினா் நா்மதா, மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா் கோவிந்தன், சமூக ஆா்வலா் செரினா, முன்னாள் ஆசிரியா்கள் மாலதி, ராணி, ஆசிரியா்கள் கனிமொழி, நிஷாந்தினி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்