Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
கள்ளச் சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை: 25 போ் கைது
சென்னையில் கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக 25 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சா் அணியும் மோதின. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக கள்ளச் சந்தையில் சிலா் அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், திருவல்லிக்கேணி போலீஸாா் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் வாயில், வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில் நிலையம் ஆகிய இடங்களில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது, கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்ாக செங்குன்றத்தைச் சோ்ந்த நிா்மல் (24), அவினாஷ் (28), தரமணியைச் சோ்ந்த வெங்கடரமணய்யா (36), திருவல்லிக்கேணியைச் சோ்ந்த சுரேஷ் (27), விஜய் (28), சூளையைச் சோ்ந்த நவீன் (25), ராயப்பேட்டையைச் சோ்ந்த செரீப் (27), ஷ்வாப் (19), பெருங்குடியைச் சோ்ந்த வெற்றிவேல் (28), தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த சுதாகா் (24), அயனாவரத்தைச் சோ்ந்த பிரவீண் (19), தியாகராயநகரைச் சோ்ந்த நரேஷ் (25) உள்ளிட்ட 25 போ் கைது செய்யப்பட்டனா்.
கள்ளச்சந்தையில் ஐபிஎல் டிக்கெட் விற்றதாக மொத்தம் 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 48 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணைக்கு பின்னா் கைது செய்யப்பட்ட 25 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.