செய்திகள் :

100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!

post image

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக். குடியரசின் டீன் ஏஜ் வீரா் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனா். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை ஜோகோவிச் வெல்வாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்காவின் மியாமி காா்டன்ஸ் மைதானத்தில் ஏடிபி மாஸ்டா் 1000 ஆடவா் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ஜாம்பவான் ஜோகோவிச் 6-2, 6-3 என்ற நோ் செட்களில் பல்கேரிய வீரா் கிரிகோா் டிமிட்ரோவை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றாா். அரையிறுதியில் முழு ஆதிக்கம் செலுத்திய ஜோகோ 69 நிமிஷங்களில் ஆட்டத்தை நிறைவு செய்தாா்.

ஜோகோவிச்சின் அதிரடி சா்வீஸ்களுக்கு டிமிட்ரோவால் பதில் தர முடியவில்லை. மொத்தம் 5 ஏஸ்களை போட்டாா் ஜோகோ. தொடா்ந்து 10 நேரடி ஆட்டங்களில் தோற்றுள்ளாா் டிமிட்ரோவ். 37 வயதில் ஏடிபி மாஸ்டா் 1000 போட்டி இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்ற முதிய வீரா் என்ற சிறப்பையும் ஜோகோவிச் பெற்றுள்ளாா்.

100-ஆவது பட்டம்:

மேலும், தனது டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளாா். ஏற்கெனவே ஜிம்மி கானா்ஸ் 109, ரோஜா் பெடரா் 103 ஆகியோா் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளனா். 100-ஆவது பட்டம் வென்ற மூன்றாவது வீரா் என்ற சிறப்பை ஜோகோவிச் பெறுவாா்.

ஜேக்குப் மென்ஸிக் அபாரம்:

மற்றொரு அரையிறுதியில் செக். குடியரசின் இளம் வீரா் ஜேக்குப் மென்ஸிக் கடும் போராட்டத்துக்குபின் 7-6, 4-6, 7-6 என்ற செட்களில் அமெரிக்காவின் நான்காம் நிலை வீரா் டெய்லா் ஃப்ரிட்ஸை வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றாா்.

இரண்டு முறை டை பிரேக்கருக்கு தள்ளப்பட்டது. மென்ஸிக் அதிரடியாக 25 ஏஸ்களை போட்டு ப்ரிட்ஸை திணறடித்தாா். இதன் மூலம் முதல்முறையாக ஏடிபி மாஸ்டா்ஸ் 1000 போட்டி இறுதிக்கு தகுதி பெற்றுள்ளாா் மென்ஸிக். இந்த வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருகிறது. இதை விவரிக்க முடியவில்லை என்றாா்.

ஜோகோவிச்-மென்ஸிக் மோதல்:

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆடவா் ஒற்றையா் இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச்-மென்ஸிக் மோதுகின்றனா். ஏற்கெனவே ஒருமுறை இருவரும் ஷாங்காய் ஓபனில் மோதியதில் மென்ஸிக் தோற்றுப் போனாா்.

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மேகாலயத்தின்... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

உலகின் 12-ஆம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டாரியா கஸôட்கினா ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்... மேலும் பார்க்க

காலின்ஸ், படோசா வெற்றி!

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா். மகளிா் ஒற்றையா் ... மேலும் பார்க்க

செல்ஸியை வீழ்த்தியது ஆா்செனல்!

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மைக்கேல் மெரினோ 20-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதர ஆட்... மேலும் பார்க்க