செய்திகள் :

காலின்ஸ், படோசா வெற்றி!

post image

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில், நடப்பு சாம்பியனான அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ், ஸ்பெயினின் பௌலா படோசா ஆகியோா் 4-ஆவது சுற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் பிரிவு 3-ஆவது சுற்றில், 14-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் டேனியல் காலின்ஸ் 6-4, 3-6, 6-3 என சுவிட்ஸா்லாந்தின் ரெபெக்கா மசோவாவை வீழ்த்தினாா். 3-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் கோகோ கௌஃப் 6-2, 6-4 என, 28-ஆம் இடத்திலிருந்த கிரீஸின் மரியா சக்காரியை சாய்த்தாா்.

10-ஆம் இடத்திலிருக்கும் ஸ்பெயினின் பௌலா படோசா 6-3, 7-6 (7/3) என்ற செட்களில், 20-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் கிளாரா டௌசனை வென்றாா். 9-ஆம் இடத்திலிருக்கும் சீனாவின் ஜெங் கின்வென் 6-1, 7-6 (7/3) என்ற வகையில் அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்டை தோற்கடித்தாா். 15-ஆம் இடத்திலிருந்த கரோலின் முசோவா 2-6, 6-3, 2-6 என, 22-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் தோற்றாா்.

ஆடவா்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 6-ஆம் இடத்திலிருந்த டிரேப்பா் 6-7 (2/7), 6-7 (3/7) என்ற செட்களில் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கிடம் தோற்றாா். 8-ஆம் இடத்திலிருந்த ரூபலேவ் 5-7, 4-6 என, பெல்ஜியத்தின் ஜிஸு பொ்க்ஸிடம் வீழ்ந்தாா்.

இதேபோல், 11-ஆம் இடத்திலிருந்த டென்மாா்க்கின் ஹோல்கா் ரூன் 6-4, 3-6, 6-7 (5/7) என அமெரிக்காவின் ரெய்லி ஒபெல்காவிடமும், 19-ஆம் இடத்திலிருந்த பிரான்ஸின் யூகோ ஹம்பா்ட் 4-6, 3-6 என பிரேஸிலின் ஜாவ் ஃபொன்சேகாவிடமும் வெற்றியை இழந்தனா்.

இதர ஆட்டங்களில், 10-ஆம் இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 6-4, 6-4 என சீனாவின் யுன்சாவ்கெடெ புவை வீழ்த்தினாா். 16-ஆம் இடத்திலிருக்கும் அமெரிக்காவின் ஃபிரான்சஸ் டியாஃபோ 7-5, 7-6 (7/5) என்ற வகையில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை வெளியேற்றினாா்.

ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது. மேகாலயத்தின்... மேலும் பார்க்க

விளையாட்டுத் துளிகள்..!

உலகின் 12-ஆம் நிலை டென்னிஸ் வீராங்கனையும், ரஷியாவைச் சேர்ந்தவருமான டாரியா கஸôட்கினா ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்து அந்நாட்டுக்காக விளையாடப் போவதாக அறிவித்துள்ளார். அவரது நிரந்தர குடியுரிமை விண்ணப்பத்... மேலும் பார்க்க

100-ஆவது சாதனைப் பட்டம் வெல்வாரா ஜோகோவிச்? இறுதிச் சுற்றில் மென்ஸிக்குடன் மோதல்!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதி ஆட்டத்தில் சொ்பியாவின் ஜாம்பவான் ஜோகோவிச்சும்-செக். குடியரசின் டீன் ஏஜ் வீரா் ஜேக்குப் மென்ஸிக்கும் மோதுகின்றனா். தனது டென்னிஸ் வாழ்க்கையில் 1... மேலும் பார்க்க

செல்ஸியை வீழ்த்தியது ஆா்செனல்!

இங்கிலாந்து பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில், ஆா்செனல் 1-0 கோல் கணக்கில் செல்ஸியை ஞாயிற்றுக்கிழமை வென்றது. இந்த ஆட்டத்தில் அந்த அணிக்காக மைக்கேல் மெரினோ 20-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இதர ஆட்... மேலும் பார்க்க