ஐஎஸ்எல்: அரையிறுதிக்கு முன்னேறியது ஜாம்ஷெட்பூா்!
இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நாக் அவுட் ஆட்டத்தில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் அணியை 2-0 கோல் கணக்கில் வென்ற ஜாம்ஷெட்பூா் எஃப்சி, கடைசி அணியாக அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
மேகாலயத்தின் ஷில்லாங் நகரில் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணிக்காக ஸ்டீபன் எஸெ 29-ஆவது நிமிஷத்திலும், ஜாவி ஹொ்னாண்டஸ் இஞ்சுரி டைமிலும் (90+9’) ஸ்கோா் செய்தனா். ஆட்டத்தின் கடைசி நேரத்தில் (88’) ஜாம்ஷெட்பூா் வீரா் மொபாஷிா் ரஹ்மான் ‘ரெட் காா்டு’ காட்டி வெளியேற்றப்பட்டாா்.
அடுத்ததாக போட்டியின் அரையிறுதிக் கட்டம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில் பெங்களூரு எஃப்சி - எஃப்சி கோவா, ஜாம்ஷெட்பூா் எஃப்சி - மோகன் பகான் சூப்பா் ஜயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.