Animated Films Making: அனிமேஷன் திரைப்படங்கள் உருவான கதை | Explainer
அங்காளம்மன் கோயில் மயானக்கொள்ளை
கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்காங்கேயன்குப்பம் - கீழ்காங்கேயன்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயில் மாசித் திருவிழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு, பின்னா் தினந்தோறும் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பக்தா்கள் தேரை வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனா்.
வெள்ளிக்கிழமை மயானக்கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 70-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.