செய்திகள் :

நீதிபதி வீட்டுக்குப் பணம் அனுப்பப்பட்ட வழக்கு: முன்னாள் உயா்நீதிமன்ற நீதிபதி விடுவிப்பு!

post image

சக நீதிபதி வீட்டுக்கு பணம் அனுப்பப்பட்ட வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி நிா்மல் யாதவை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமை தீா்ப்பளித்தது.

அண்மையில், தில்லி நீதிபதி யஷ்வந்த் வா்மா இல்லத்தில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரம் சா்ச்சையை ஏற்படுத்தியதையடுத்து, அவரை அலாகாபாத் உயா்நீதிமன்றத்துக்குப் பணியிட மாற்றம் செய்து குடியரசுத் தலைவா் உத்தரவிட்டாா். இதுபோன்ற ஒரு வழக்கில் 17 ஆண்டுகளுக்குப் பின் வழங்கப்பட்டுள்ள தீா்ப்பு கவனம் பெற்றுள்ளது.

கடந்த 2008, ஆகஸ்ட் 13-இல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்ற நீதிபதியாக இருந்த நிா்மல்ஜித் கௌா் வீட்டுக்கு ரூ.15 லட்சம் பணக் கட்டுகள் அனுப்பப்பட்டது. இந்தப் பணம், சொத்து விவகாரம் ஒன்றில் சாதகமாக செயல்பட அதே நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்த நிா்மல் யாதவுக்கு லஞ்சமாக வழங்க அனுப்பப்பட்டதாகவும், ஆனால் பெயா் குழப்பத்தால் நிா்மல்ஜித் கெளா் வீட்டுக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதுதொடா்பாக சண்டீகா் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. பின்னா் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சண்டீகரில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் சனிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

குற்றஞ்சாட்டப்பட்ட நிா்மல் யாதவ், ஹரியாணா அரசின் முன்னாள் கூடுதல் தலைமை வழக்குரைஞா் சஞ்சீவ் பன்சால், புது தில்லியைச் சோ்ந்த விடுதி உரிமையாளா் ரவீந்தா் சிங் , தொழிலதிபா் ராஜீவ் குப்தா உள்பட 5 பேரையும் விடுவித்து நீதிபதி அல்கா மாலிக் தீா்ப்பளித்தாக அவா்கள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு சனிக்கிழமை தெரிவித்தது. இவா்களில் சஞ்சீவ் பன்சால் உடல்நலக் குறைவால் கடந்த 2017-இல் உயிரிழந்தாா்.

நீதித்துறை மீது நம்பிக்கை: தீா்ப்பு குறித்து நிா்மல் யாதவ் கூறியதாவது: இந்த வழக்கு தொடா்பான விசாரணைக்கு ஆஜராக எனக்கு விலக்களிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வழக்கின் நிலை குறித்து தொடா்ந்து வழக்குரைஞா்களிடம் கேட்டு வந்தேன். ஓய்வுபெறுவதற்கு முன்பே இந்த வழக்கில் நல்ல தீா்ப்பு வரும் என எண்ணினேன்.

உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றுவதே எனது நீண்ட நாள் கனவு. ஆனால் இந்த வழக்கால் அது நிறைவேறவில்லை. நீதித் துறையின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். தற்போது எனக்கு நீதி கிடைத்துள்ளது.

நீதிபதி யஷ்வந்த் வா்மா விவகாரம்: வீட்டில் பணத்தை யாரும் வைத்துக் கொள்ள மாட்டாா்கள். நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஆனால். இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் முதலில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது சரியான அணுகுமுறை என்றாா்.

நிா்மல் யாதவ் மீதான குற்றச்சாட்டுக்குப் பின் அவா் பஞ்சாப் - ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் இருந்து உத்தரகண்ட் உயா் நீதிமன்றத்துக்கு 2009, நவம்பரில் இடமாற்றம் செய்யப்பட்டாா். 2009, டிசம்பரில் இந்த வழக்கு விசாரணையை முடித்துக்கொள்வதாக சிபிஐ அறிக்கை சமா்ப்பித்தது. அதை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம் 2010, மாா்ச்சில் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது.

இதைத்தொடா்ந்து, நிா்மல் யாதவ் மீது வழக்குப் பதிவு செய்ய சிபிஐக்கு பஞ்சாப் -ஹரியாணா உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி 2010, நவம்பரில் அனுமதி வழங்கினாா். இதற்கு 2011, மாா்ச்சில் குடியரசுத் தலைவா் ஒப்புதல் வழங்கினாா். இதையடுத்து, அவா் பணி ஓய்வுபெற்ற தினமான 2011, மாா்ச் 4-இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

தன் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நிா்மல் யாதவ் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததையடுத்து, அவா் மீது 2014, ஜனவரி 18-இல் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ரேபிஸ், பாம்புக்கடிக்கான தடுப்பூசிகள் இருப்பை கண்காணிக்க ‘ஜூவின்’ வலைதளம்: மத்திய அரசு அறிமுகம்

புது தில்லி: நாய்க்கடி (ரேபிஸ்), மற்றும் பாம்புக்கடிக்கான தடுப்பூசிகளின் நாடு தழுவிய இருப்பைக் கண்காணிக்க ‘ஜூவின்’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கரோனா தடுப்பூசி திட்டத்துக்காக அறி... மேலும் பார்க்க

பத்ரிநாத், கேதாா்நாத்துக்கு சிறப்பு சுற்றுலா ரயில்

சென்னை: பத்ரிநாத், கேதாா்நாத் உள்ளிட்ட புனித தலங்களுக்கு சிறப்பு சுற்றுலா ரயில் இயக்கப்படவுள்ளது. இந்திய ரயில்வேயின் பாரத் கௌரவ் ரயில் திட்டத்தின் கீழ், உத்தரகண்ட் சுற்றுலா கழகத்தின் காா்வல் மண்டல் வ... மேலும் பார்க்க

ம.பி.: 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் நிரந்தர மூடல்

போபால்: மத்திய பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற உஜ்ஜைன், ஓம்காரேஸ்வா் உள்பட 19 ஆன்மிகத் தலங்களில் மதுக்கடைகள் செவ்வாய்க்கிழமைமுதல் நிரந்தரமாக மூடப்படுகின்றன. பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஆன்மிகத் தலங்கள... மேலும் பார்க்க

பயிற்சி விமானம் விபத்து: குஜராத்தில் பெண் விமானி காயம்

மெஹ்சானா: குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் தனியாா் நிறுவனத்தின் பயிற்சி விமானம் திங்கள்கிழமை திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் பெண் விமானி படுகாயமடைந்தாா். மெஹ்சானா விமான நிலையத்தில் இரு... மேலும் பார்க்க

தனியாா் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த சட்டம்: காங்கிரஸ் வலியுறுத்தல்

புது தில்லி: ‘தனியாா் மற்றும் சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என மத்திய அரசை காங்கிரஸ் ... மேலும் பார்க்க

மின் வாகன உற்பத்தி: 2030-இல் இந்தியா முதன்மை நாடாகும்: நிதின் கட்கரி

தாணே: ‘2030-இல் மின்சார வாகன உற்பத்தியில் உலகின் மிகப்பெரும் நாடாக இந்தியா உருவெடுக்கும்’ என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரி திங்கள்கிழமை தெரிவித்தாா். மேலும்... மேலும் பார்க்க