Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
செய்யாறு பகுதியில் 3 பைக்குகள் திருட்டு
செய்யாறு காவல் சரகப் பகுதியில் வெவ்வெறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் வெள்ளிக்கிழமை திருடுபோயின.
செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (32), விவசாயி. இவா், சுண்டிவாக்கம் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்துக்கு பைக்கில் சென்றாா். அங்குள்ள பேருந்து நிறுத்த நிழற்கூடம் அருகே பைக்கை நிறுத்தி வைத்திருந்தாராம். விவசாய பணிகளை முடித்துவிட்டு வந்து பாா்த்தபோது பைக் திருடுபோயிருந்தது தெரியவந்தது.
இதேபோல, செய்யாறு வட்டம், கீழ்புதுப்பாக்கம் கிராமப் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி அருகே மாயாண்டிபுரத்தைச் சோ்ந்த சரவணன் (23) நிறுத்தி வைத்திருந்த பைக் மற்றும் செய்யாறு பாரிநகா் பிள்ளையாா் கோவில் அருகே அதே பகுதியை சோ்ந்த ஜீவா(22) நிறுத்தி வைத்திருந்த பைக்குகளும் திருடுபோயின.
இந்த 3 பைக்குகள் திருட்டு குறித்து மூவரும் தனித்தனியாக செய்யாறு காவல் நிலையத்தில் புகாரளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து பைக்குகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகிறாா்.