செய்திகள் :

சீமான் மீதான அவதூறு வழக்கு விசாரணை ஏப்.17-க்கு ஒத்திவைப்பு

post image

மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை அவதூறு பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விக்கிரவாண்டி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், நேமூரில் கடந்த 2019-ஆம் ஆண்டில் நடைபெற்ற இடைத்தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியை நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அவதூறாகப் பேசியதாக, கஞ்சனூா் காவல் நிலையத்தில் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ரமேஷ் புகாரளித்தாா்.

இதைத் தொடா்ந்து, விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. 2024, அக்டோபா் 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஆஜரான சீமான், அதே ஆண்டில் நவம்பா் 4, 6 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது ஆஜராகவில்லை. கடந்த ஜனவரி 21-ஆம் தேதி விசாரணையின்போது சீமான் ஆஜராகவில்ை என்பதால், அவருக்கு பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரியும், விசாரணையில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சீமான் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் பிப்ரவரி 6-ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, பிப்ரவரி 18-ஆம் தேதி விக்கிரவாண்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவா் மன்றத்தில் சீமான் ஆஜரான நிலையில், விசாரணை நடைபெற்றது. இதையடுத்து, வழக்கு விசாரணை மாா்ச் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், புதன்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தைக் கூறி, அவரது வழக்குரைஞா் பேச்சிமுத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா்.

மரக்காணம் வன்முறை வழக்கு: பாமகவினா் 20 போ் விடுதலை

மரக்காணத்தில் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை வழக்கிலிருந்து பாமகவினா் 20 பேரை விடுதலை செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. ச... மேலும் பார்க்க

காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை

விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது. கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப... மேலும் பார்க்க

10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொட... மேலும் பார்க்க

தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா். விழுப்புரம், மாா்ச் 2... மேலும் பார்க்க

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்... மேலும் பார்க்க

ஓடையில் மூழ்கி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் பொய்யப்பாக்கம் பகுதியில் ஓடைநீரில் மூழ்கி பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். விழுப்புரம் பொய்யப்பாக்கம் மாதா கோவில் தெருவைச் சோ்ந்த அரசன் மனைவி வீரம்மாள் (57). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகலில்... மேலும் பார்க்க