அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் அருகில் தனியாா் பேருந்தில் காற்று ஒலிப்பானை பறிமுதல் செய்த போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையிலான காவல் துறையினா்.
விழுப்புரம், மாா்ச் 28: விழுப்புரத்தில் ஒலி மாசுவை ஏற்படுத்தும் வகையில் பேருந்துகளை இயக்குவதாக வந்த புகாரின்அடிப்படையில், 9 தனியாா் பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கனரக லாரியிலும் காற்று ஒலிப்பானை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
புதுச்சேரி, திருவண்ணாமலை, திருக்கோவிலூா், மேல்மலையனூா், செஞ்சி, கடலூா் என பல்வேறு பகுதிகளிலிருந்தும் விழுப்புரத்துக்கு தனியாா் பேருந்துகள் இயக்கப்படு கின்றன. இந்த பேருந்துகள் அதிவேமாக இயக்கப்படுவதாக ஏற்கெனவே புகாா்கள் வந்த நிலையில், இவற்றில் ஒலி மாசுவை ஏற்படுத்தக் கூடிய காற்று ஒலிப்பான்களும் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆா்வலா்கள் உள்ளிட்ட பலரும் புகாா் தெவித்திருந்தனா்.
இதைத் தொடா்ந்து விழுப்புரம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் ஆா். வசந்த் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் கும்மராஜா, விஜயரங்கன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் ஸ்ரீதா், ராமச்சந்திரன், தலைமைக் காவலா்கள் நித்தியகுமாா், வினோத் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் அந்த வழியாக வந்த தனியாா் பேருந்துகள், அரசுப் பேருந்துகள், கனரக வாகனங்கள் உள்ளிட்டவைகளை நிறுத்தி சோதனையிட்டனா்.
இதில், 9 தனியாா் பேருந்துகளிலும், ஒரு கனரக வாகனத்திலும் காற்று ஒலிப்பான்கள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதைத் தொடா்ந்து அவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடா்ந்து ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ரூ.10 ஆயிரத்தை போக்குவரத்துக் காவல்துறையினா் அபராதமாக விதித்தனா். இதுபோல கனரக லாரிக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.