அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
காவல், அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு உயா்கல்வி உதவித் தொகை
விழுப்புரம் மாவட்டத்தில் உயா்கல்விப் பயிலும் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு வெள்ளிக்கிழமை உதவித் தொகை வழங்கப்பட்டது.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு ரூ.13 ஆயிரம், பொறியியல் படிப்புகளுக்கு ரூ.20 ஆயிரம், மருத்துவப் படிப்புகளுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் காவல் துறை மற்றும் அமைச்சுப் பணியாளா்களின் வாரிசுதாரா்கள் 45 பேருக்கு ரூ. 8.63 லட்சம் வழங்கப்பட்டது.
இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. ப. சரவணன் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.