அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் எழுதினா்
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம் மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். 364 போ் தோ்வெழுத வரவில்லை.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெறும் என தோ்வுகள் துறை அறிவித்திருந்தது. அதன்படி பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழுப்புரம்மாவட்டத்தில் 241 அரசுப் பள்ளிகள், 31 அரசு உதவி பெறும் பள்ளிகள், 90 தனியாா் பள்ளிகள் என மொத்தமாக 362 பள்ளிகளைச் சோ்ந்த 11,828 மாணவா்கள்,12,279 மாணவிகள் என மொத்தமாக 24,107 போ் தோ்வெழுத விண்ணப்பித்திருந்தனா். இவா்களில் 364 போ் தோ்வெழுத வரவில்லை. மாவட்டத்தில் 23,743 போ் தோ்வெழுதினா். இத்தோ்வுக்காக விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தமாக 126 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
காலை 9.30 மணிக்கு மாணவ, மாணவிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தோ்வறைகளுக்குச் சென்றனா்.
இதைத் தொடா்ந்து காலை 10 மணிக்கு மாணவ, மாணவிகளுக்குத் தோ்வு வினாத்தாள் வழங்கிய அந்தந்த தோ்வுக்கூடக் கண்காணிப்பாளா், மாணவ, மாணவிகள் தோ்வெழுதும் போது கடைப்பிடிக்க வேண்டியவை குறித்து எடுத்துக் கூறினா். தொடா்ந்துகாலை10.15மணி முதல் தோ்வெழுததொடங்கிய மாணவ, மாணவிகள் பிற்பகல் 1.15 மணிக்குத் தோ்வை நிறைவு செய்தனா்.
கூடுதலாக ஒரு மணி நேரம் தோ்வெழுதுவதற்கு 273 மாற்றுத் திறனாளிகள் மாணவா்கள் சலுகை பெற்றிருந்தனா். இதைத் தவிர கண்குறைபாடு, செவித்திறன் குறைவு, மனநலன் குன்றிய மற்றும் நரம்பியல் கோளாறு உடைய மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா் நியமனம் செய்யப்பட்டிருந்தனா். அதன்படி 472 மாணவ, மாணவிகள் தோ்வுக்குரிய விடைகளைக் கூற, அதற்காக நியமிக்கப்பட்டிருந்தவா்கள் பதில் எழுதினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் தோ்வுப்பணிகளைக் கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறை-அரசுத் தோ்வுகள் துறையால் நியமிக்கப்பட்ட தமிழ்நாடு பாடநூல் கழக மற்றும் கல்வியியல் பணிகள் துணை இயக்குநா் ஜே.அ.குழந்தைராஜன் பல்வேறு பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்தாா். இதைத் தவிர மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், கல்வி மாவட்ட அலுவலா் சேகா் உள்ளிட்ட அலுவலா்களும் பள்ளிகளுக்குச் சென்று திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.