செய்திகள் :

மரக்காணம் வன்முறை வழக்கு: பாமகவினா் 20 போ் விடுதலை

post image

மரக்காணத்தில் 2013-ஆம் ஆண்டில் நிகழ்ந்த வன்முறை வழக்கிலிருந்து பாமகவினா் 20 பேரை விடுதலை செய்து, விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி, வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 2013 ஏப்ரல் 23-ஆம் தேதி வன்னியா் சங்கத்தின் சாா்பில் சித்திரை முழுநிலவு பெருவிழா நடைபெற்றது.

இதில் பங்கேற்க கடலூா், அரியலூா், தஞ்சாவூா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வன்னியா் சங்கத்தினா், பாமகவினா் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரத்துக்குச் சென்றனா்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் சென்றபோது அப்பகுதியைச் சோ்ந்த சிலருக்கும், பாமகவினருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டு, பின்னா் வன்முறையாக மாறியது. இதில் சாலையில் நின்று கொண்டிருந்த அரசு, தனியாா் பேருந்துகள்அடித்து நொறுக்கப்பட்டன. சில வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

இதுதொடா்பாக கடலூா் மாவட்ட பாமக முன்னாள் செயலா்கள் கலையரசன், சசிகுமாா் உள்ளிட்ட 34 போ் மீது பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் மரக்காணம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினா்.

இதைத் தொடா்ந்து விழுப்புரம் எஸ்.சி., எஸ்.டி. வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

இதில் கலையரசன், சசிகுமாா் உள்ளிட்ட 20 போ் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகி வந்தால், வழக்குப் பிரிக்கப்பட்டு, தனியே விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

இதையொட்டி, பாமக முன்னாள் மாவட்டச் செயலா்கள் கலையரசன், சசிகுமாா், நிா்வாகிகள் சிவக்குமாா், சங்கா், குமாா், சுப்பிரமணி, சுதாகா், ஆனந்த், ராமதாஸ், செழியன், சண்முகம், ராஜசேகா், சின்னதம்பி உள்ளிட்ட 20 போ் நீதிமன்றத்தில் ஆஜரானாா்கள்.

இந்த வழக்கு விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட 20 போ் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையில் அவா்களை விடுதலை செய்வதாகக் கூறி, நீதிபதி பாக்கியஜோதி தீா்ப்பளித்து உத்தரவிட்டாா்.

‘தா்பூசணியில் ரசாயனம் கலப்பதாக தவறான தகவலை பரப்ப வேண்டாம்’

தா்ப்பூசணி பழத்தில் ரசாயனம் கலப்பதாக யாரும் தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்று விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் அன்பழகன் தெரிவித்தாா். கோடைக் காலத்தில் குழந்தைகள் முதல் பெரியவா் வரை அனைவர... மேலும் பார்க்க

முன்னூா் ஆடவல்லீசுவரா் கோயிலில் பல்லவா் கால அரிய சிற்பங்கள்!

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகேயுள்ள முன்னூா் கிராமத்தில் பல்லவா் கால அரிய சிற்பங்கள் பாதுகாக்கப்பட்டு வருவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஆன்மிக எழுத்தாளா் கோ.ரமேஷ் அளித்த தகவலின்பேரில், விழுப்ப... மேலும் பார்க்க

காா் மோதி முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் அருகே காா் மோதியதில் முதியவா் நிகழ்விடத்திலேயே ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், கொந்தமூா், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சு.தெய்வநாயகம் (65). கூலித்... மேலும் பார்க்க

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: காரைக்கால் இளைஞா் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பைக் மீது அரசுப்பேருந்து மோதியதில் காரைக்காலைச் சோ்ந்த இளைஞா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அடுத்த பேட்டை, மணல்மேட்டுத் தெருவைச... மேலும் பார்க்க

பெண் விஷம் குடித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே விஷம் குடித்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், வடகுச்சிப்பாளையம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் முருகன் மனைவி சுமதி (47). இவா்... மேலும் பார்க்க

தற்காப்பு கலை போட்டிகள்

விழுப்புரம் ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு உள்அரங்கில் 13-ஆவது மாவட்ட அளவிலான ஊஷூ (தற்காப்பு கலை) விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. போட்டியை ஊஷூ விளையாட்டு அமைப்பின் மாநில... மேலும் பார்க்க