அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விழுப்புரத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், கணவாய் கிராமத்தைச் சோ்ந்த தணிகாசலம் மகன் பரணி(19). எட்டாம் வகுப்பு வரை படித்த இவா், விழுப்புரம் முத்தாம்பாளையம் ஸ்டாலின் நகரிலுள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்தாா். மேலும் மாம்பழப்பட்டு சாலையிலுள்ள நெகிழி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
வெள்ளிக்கிழமை காலை இயற்கை உபாதையைக் கழிப்பதற்காக மாம்பழப்பட்டு சாலையிலுள்ள ரயில் கேட் பகுதியில் தண்டவாளத்தின்அருகில் அமா்ந்து, காதுகளில் காதொலிப்பானை (ஹெட்போன்) வைத்துக் கொண்டு இருந்தாராம். அப்போது காட்பாடியிலிருந்து விழுப்புரம் நோக்கி பயணிகள் ரயில் அவ்வழியாக வந்தது.
ரயில் தண்டவாளம் அருகே இளைஞா் அமா்ந்ததை கண்டு ஓட்டுநா் ஒலி எழுப்பியும் பரணிக்கு ரயில் வருவது தெரியவில்லை. சிறிது நேரத்தில் அவா் மீது பயணிகள் ரயில் மோதியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் முத்துச்செல்வம், ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளா் நாகராஜன் மற்றும் போலீஸாா் நிகழ்விடம் விரைந்து சடலத்தை கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.