சோனியா, ராகுல் எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்: பாஜக வலியுறுத்தல்
பங்குனி மாத அமாவாசை வழிபாடு: சதுரகிரி செல்ல மாா்ச் 27 முதல் நான்கு நாள்களுக்கு அனுமதி
ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம், அமாவாசையையொட்டி வருகிற வியாழக்கிழமை (மாா்ச் 27) முதல் 30-ஆம் தேதி வரை பக்தா்கள் மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நாள்களில் காலை 6 முதல் பகல் 12 மணி வரை மட்டுமே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா். மேலும் இரவில் மலையில் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாள்களில் மழை பெய்தால் அனுமதி ரத்து செய்யப்படும் என வனத் துறையினா் தெரிவித்தனா்.