செய்திகள் :

``அண்ணாமலைக்கு எங்களின் பலம் நன்றாகத் தெரியும்'' - சென்னையில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார்

post image
மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதல்வர் ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர், ஒடிசா முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

இன்று காலை சென்னை வந்த கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாநில உரிமைகளைக் காக்க நாங்கள் ஒருங்கிணைந்துள்ளோம். பொருளாதாரம், கல்வி என அனைத்திலும் தென்னிந்திய மாநிலங்கள் முன்னேறிய முற்போக்கான மாநிலங்களாகத் திகழ்கிறது.

தொகுதி மறுவரையறையில் எம்.பிக்களின் சீட்டுகளைக் குறைப்பதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டோம். இது எங்களின் பிரச்னையில்லை, எங்கள் மக்களின் பிரச்னை, நம் நாட்டின் பிரச்னை. மாநில உரிமைக்காக ஒன்று சேர்ந்து போராட தயாராக இருக்கிறோம்" என்றார்.

கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் பேட்டி

'தமிழ்நாடு 'பா.ஜ.க' இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குக் கண்டனம் தெரிவித்துப் போராடிக் கொண்டிருக்கிறது' என்ற கேள்விக்குப் பதிலளித்திருக்கும் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார், "பா.ஜ.க வின் கருப்புக் கொடிகளை நான் வரவேற்கிறேன். இந்த ஆபிஸர் (அண்ணாமலை) எங்கள் மாநிலத்தில் பணியாற்றியவர். அவருக்கு நாங்கள் யார், எங்களின் பலம் என்னவென்று நன்றாகத் தெரியும். அவர் அவரது வேலையைப் பார்க்கட்டும் விடுங்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Fair Delimitation: ``தொகுதி மறுவரையறை வேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. ஆனால்..'' -கனிமொழி எம்.பி

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க

Fair Delimitation: 7 மாநில முதல்வர்களின் அரசியல் உரைகள்; முன்வைத்த முக்கிய கருத்துகள் என்ன?

மத்திய அரசின், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்தி... மேலும் பார்க்க

Fair Delimitation: "இது பா.ஜ.க வின் ஆதிக்கத்திற்கு வழிவகுக்கும்"-கேரள முதல்வர் பினராயி விஜயன்

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர... மேலும் பார்க்க

Fair Delimitation: ``இந்த 5 விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்'' - உதயநிதி ஸ்டாலின்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டல... மேலும் பார்க்க

Fair Delimitation: "இரண்டாம்தர குடிமக்களாகிவிடும் அபாயம்" - தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

மத்திய அரசின் மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு ஒருங்கிணைக்கும் 7 மாநில பிரதிநிதிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர... மேலும் பார்க்க

Fair Delimitation: "சொந்த நாட்டில் அரசியல் அதிகாரத்தை இழக்கும் சூழ்நிலை" - முதல்வர் ஸ்டாலின்