கனிமா! ரசிகர்களை உருக வைத்த பூஜா ஹெக்டே!
ரெட்ரோ படத்தின் இரண்டாவது பாடலில் பூஜா ஹெக்டேவின் நடனம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.
நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக உருவான இப்படம் மே 1 ஆம் தேதி வெளியாகிறது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: பராசக்தி வெளியீடு எப்போது? தயாரிப்பாளர் பதில்!
முன்னதாக, சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் கண்ணாடி பூவே பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாடலான , ‘கனிமா’ பாடலை நேற்று (மார்ச் 21) வெளியிட்டனர். விவேக் எழுதிய இப்பாடலை சந்தோஷ் நாராயணன் பாடியதுடன் சூர்யா, பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடியும் அசத்தியிருந்தார்.
'Kanimaa' from #Retro
— AmuthaBharathi (@CinemaWithAB) March 21, 2025
Sema vibe song from SaNa
This portion of Suriya & PoojaHegde dancepic.twitter.com/4Ot0a5CJRE
முக்கியமாக, பாடல் ஜகமே தந்திரம் படத்தில் இடம்பெற்ற ’ரகிட ரகிட’ பாடலை நினைவூட்டினாலும் பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் பலரையும் கவர்ந்துள்ளது. இதனால், பூஜா ஹெக்டேவின் நடன காட்சிகளை கட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.