பக்தா்கள் வசதிக்காக திருச்செந்தூா் கோயில் காவல் நிலையம் இடமாற்றம்
அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல்
அகர்தலா ரயில் நிலையத்தில் 75.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுரா மாநிலம், அகர்தலா ரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில் அதிகாரிகள் வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தியோகர் எக்ஸ்பிரஸில் இருந்து 75.5 கிலோ உலர் கஞ்சாவை மீட்டு பறிமுதல் செய்தனர். கடத்தப்பட்ட கஞ்சா கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டது.
அதற்கு யாரும் உரிமைகோவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சந்தை மதிப்பு ரூ.15.10 லட்சம் ஆகும். கடத்தல் முயற்சிக்குப் பின்னால் இருப்பவர்களைக் கண்டறிய அகர்தலா அரசு ரயில்வே காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பாட்னாவில் மருத்துவமனை இயக்குநர் சுட்டுக்கொலை
மேலும் இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க ரயில் நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னதாக புதன்கிழமை அகர்தலா ரயில் நிலையத்தில் வழக்கமான சோதனையின் போது ரூ.5.10 லட்சம் மதிப்புள்ள 34 கிலோ உலர் கஞ்சாவை அதிகாரிகள் மீட்டு பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.