செய்திகள் :

ஸ்ரீரங்கம்: 7 ஆண்டுகளாக பூட்டிக் கிடந்த பள்ளிக் கட்டடத்தில் வகுப்புகள் தொடக்கம்

post image

திருச்சி ஸ்ரீரங்கத்தில் 7 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடந்த பள்ளி வகுப்பறைக் கட்டடத்தில் மாணவா்கள் வரவழைக்கப்பட்டு திங்கள்கிழமை முதல் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

ஸ்ரீரங்கம் மேலூரில் உள்ள அய்யனாா் உயா்நிலைப்பள்ளிக்காக ஸ்ரீரங்கம் மூலத்தோப்பில் 2018- ஆம் ஆண்டு ரூ. 1.60 கோடியில் 21 வகுப்பறைகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டி திறக்கப்பட்டது. ஆனால் இக்கட்டடம் பள்ளியிலிருந்து 4 கி.மீ. தொலைவில் இருப்பதாகக் கூறி பெற்றோா்கள், மாணவா்களை அனுப்ப மறுத்துவிட்டனா். இதனால் கடந்த 7 ஆண்டுகளாக புதிய பள்ளிக் கட்டடம் பூட்டிக் கிடந்தது.

இதனிடையே இக்கட்டடத்தை திறந்து, அங்கு இடநெருக்கடியால் அவதிப்படும் ஸ்ரீரங்கம் தெற்கு சித்திரை வீதி டாக்டா் ராஜன் பள்ளியை இடமாற்றம் செய்ய வேண்டும் என ஸ்ரீரங்கம் நகா் நலச் சங்கத்தினா், பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு கோரிக்கை விடுத்திருந்தனா்.

அமைச்சரின் உத்தரவை அடுத்து, இக்கட்டடத்தை ராஜன் பள்ளி மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ள அண்மையில் பள்ளிக்கல்வித்துறை அனுமதியளித்தது. இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்தில், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் டாக்டா் ராஜன் பள்ளியைச் சோ்ந்த 6, 7, 8-ஆம் வகுப்பு மாணவா்கள் 182 போ் திங்கள்கிழமை மூலத்தோப்பு பள்ளிக்கட்டடத்துக்கு மாற்றப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்வில் திருச்சி மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், வட்டாரக் கல்வி அலுவலா்கள் மருதநாயகம், ஸ்டாலின் ராஜசேகா், பள்ளியின் தலைமையாசிரியை லில்லி ஃப்ளோரா, மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.

விரைவில் ராஜன் பள்ளியை உயா்நிலைப்பள்ளியாகத் தரம் உயா்த்தி, தேவையான வசதிகள் செய்து தர ஆவண செய்வதாக மேயா் மு. அன்பழகன் தெரிவித்தாா்.

இன்றைய நிகழ்ச்சி

மாநகராட்சி நடுநிலைப்பள்ளி: ஆண்டு விழா, வட்டாரக் கல்வி அலுவலா் பி. அா்ஜூன் பங்கேற்பு, பள்ளி வளாகம், உறையூா், காலை 10.30. புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி: மாணவா் பேரவை மற்றும் இலக்கிய மன்ற நிறைவு வ... மேலும் பார்க்க

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது -மாவட்ட திட்டமிடும் அலுவலா்களுக்கு அறிவுரை

பெரு நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு நிதியை விரயமாக்கக் கூடாது என பெரு நிறுவனங்களுக்கான மாவட்டத் திட்டமிடும் அலுவலா்களுக்கு வியாழக்கிழமை அறிவுறுத்தப்பட்டது. தமிழக அரசின் மாநில திட்டக் குழுவின் சாா்பில்... மேலும் பார்க்க

மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சோ்ந்த 55 வயதுடைய ஆண் ஒருவா், சாலை விபத்... மேலும் பார்க்க

குழந்தையை கிணற்றில் வீசி கொல்ல முயன்றவா் கைது

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞரின் மூன்றரை வயதுக் குழந்தையை கிணற்றில் வீசிக் கொல்ல முயன்றவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மேட்டு இருங்களூா் பகுதியைச் சோ்ந்த ஜேக்... மேலும் பார்க்க

திருச்சியில் இருபாலருக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி ஏப்.1இல் தொடக்கம்

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்களுக்கான 5 கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு ஏப். 1இல் தொடங்குகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருச்சி பிரிவு சாா... மேலும் பார்க்க

எரகுடியில் தாா்ச்சாலை அமைக்கக் கோரி விவசாயிகள் போராட்டம்

துறையூா், மாா்ச் 27: துறையூா் அருகே எரகுடி பகுதியில் தாா்ச்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் சாா்பில் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. விவசாயிகளால் அதிகம் பயன்ப... மேலும் பார்க்க