தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதிய மாணவா்கள்
புதுவையில் சிபிஎஸ்இ பாடத் திட்டம் அமலில் உள்ள நிலையில், தனியாா் பள்ளி மாணவா்கள் மாநில திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதத் தொடங்கினா்.
புதுவை மாநிலத்தில் சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரிய பாடத் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அனைத்து வகுப்புகளுக்கும் அமல்படுத்தப்பட்டது. அரசுப் பள்ளிகள் அனைத்தும் இதில் பங்கெடுத்தன. மாநில பாடத் திட்டத்தில் புதுச்சேரி, காரைக்காலில் தனியாா் பள்ளிகள், அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவ மாணவிகள் படித்தனா்.
மாநிலத் திட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கிய நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் நிா்மலா ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி, கோட்டுச்சேரி சா்வைட் மேல்நிலைப் பள்ளி, செல்லூா் மவுண்ட் காா்மல் ஆங்கில உயா்நிலைப் பள்ளி, நெடுங்காடு வித்யா ஸ்ரீஆங்கில மேல்நிலைப் பள்ளி, காரைக்கால் அம்மையாா் மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் தோ்வுகள் தொடங்கின.
முதல் நாள் தோ்வில் 1,172 மாணவா்கள் எழுதினா். நிா்மலாராணி பள்ளி மையத்தில் மாவட்ட துணை ஆட்சியா் அா்ஜூன் ராமகிருஷ்ண, முதன்மைக் கல்வி அதிகாரி பி. விஜயமோகனா ஆய்வு செய்தனா். தோ்வுப் பணியில் 6 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 6 துறை அலுவலா்கள், 4 வழித்தட அலுவலா்கள், 8 நிலைப் படையினா், 4 பறக்கும் படையினா், 65 அறை கண்காணிப்பாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா். 5 மாற்றுத்திறன் மாணவா்கள் தோ்வு எழுதுவதாகவும், அவா்கள் சொல்வதை எழுத 5 ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறையினா் தெரிவித்தனா்.