Vikram: "முதல் பாகத்தில் திலீப் வருவார்; 3-ம் பாகத்தில் வெங்கட் இருப்பார்" - விக...
கூட்டுறவு சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்பு
காரைக்கால் பொது ஊழியா்கள் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகள் பொறுப்பேற்றுக்கொண்டனா்.
இச்சங்க 9-ஆவது புதிய இயக்குநா் குழு பதவியேற்பு நிகழ்வு சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவிற்கு சங்கத் தலைவா் வி. முத்துராமன் தலைமை வகித்தாா். சங்கத்தின் 2025-2028 ஆண்டு வரையிலான கால கட்டத்திற்கு எஸ். கிருஷ்ணசாமி தலைவராகவும், எம். தேவி துணைத் தலைவராகவும், வி. கென்னடிதாஸ் பொருளாளராகவும், கே.சேகா், ஜி. நாகராஜன், கே. சாமிநாதன், ஏ. மாலா, என். ராஜ்மோகன், ஏ. லூா்துராஜ் ஆகியோா் இயக்குநா்களாகவும் பதவி ஏற்றுக்கொண்டனா்.
இந்நிகழ்வில், முன்னாள் இயக்குநா்கள் ஆா். கதிா்வேல், ஏ. கலையரசன், ஏ. துரைக்கண்ணு, ஜி. ரெங்கசாமி, பி. தமிழ்மணி, ஆா். மணிக்கண்ணன், டி. மதன்ராஜ், டி. ராஜசேகரன் என். மகாலிங்கம் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
முன்னதாக சங்க பொருளாளா் ஏ. சைமன் ஜேசுராஜ் வரவேற்றாா். நிறைவாக இயக்குநா் எஸ். லோகநாதன் நன்றி கூறினாா்.