உதவி இயக்குநராக சேர வேண்டுமா? டிராகன் இயக்குநரின் சுவாரஸ்வமான நிபந்தனைகள்!
கோதண்டராம பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவ கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.
10 நாள் உற்சவமாக இவ்விழா நடைபெறுகிறது. வெள்ளிக்கிழமை கருடக்கொடி பிரதிஷ்டை செய்யப்பட்டு, சனிக்கிழமை காலை 7.30 முதல் 8.45 மணிக்குள் கொடிகம்பத்தில் ஏற்றப்பட்டது.
இதையொட்டி, கொடிக்கம்பத்தின் அருகே எழுந்தருளிய ஸ்ரீ தோதண்டராமருக்கும், கொடிக் கம்பத்துக்கும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. மாலை நிகழ்வாக சேஷ வாகனத்தில் பெருமாள் வீதியுலா நடைபெற்றது.
தொடா் நிகழ்வாக 30-ஆம் தேதி மாலை சூரிய பிரபை, 31-ஆம் தேதி சந்திர பிரபை, ஏப்.1-இல் கருட வாகனம், 2-இல் ஹனுமந்த வாகனம், 3-இல் சிம்ம வாகனம் மற்றும் 4-ஆம் தேதி மாலை 5 மணிக்கு யானை வாகனத்தில் பெருமாள் புறப்பாடு நடைபெற்றுகிறது. அன்று மாலை 6 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், ஏப். 5 மாலை குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறுகிறது.

ஏப். 6-ஆம் தேதி காலை தோ் வீதியுலாவும், 10 மணிக்கு சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரியும், மாலை நிகழ்வாக சப்தாவா்ணமும் நடைபெறுகிறது. 7-ஆம் தேதி விடையாற்றியாக ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் பங்களிப்புடன் நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பாா்வதீஸ்வரா்-கோதண்டராம பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் ஆகியோா் செய்துவருகின்றனா்.