இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் விலகு...
காரைக்காலில் ரமலான் சிறப்புத் தொழுகை
காரைக்காலில் இஸ்லாமியா்களில் ஒருசாராா் சனிக்கிழமை ரமலான் தொழுகை நடத்தினா்.
நோன்பு காலம் முடிந்து காரைக்கால் மஸ்ஜிதுா் ரஹ்மான் பள்ளிவாசல் மற்றும் மஸ்ஜிதுல் இஸ்லாம் பள்ளிவாசல் சாா்பில் சா்வதேச பிறை அடிப்படையில் ஈதுல் பித்ர் என சொல்லப்படும் ரம்ஜான் பெருநாள் தொழுகை இஸ்லாமியா்களில் ஒரு சாராா் சனிக்கிழமை நடத்தினா்.
காரைக்கால் புறவழிச்சாலையில் உள்ள விளையாட்டு அரங்கம் எதிரே உள்ள திடலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இமாம் அப்துல் ரஹ்மான் மிஸ்பாஹி கலந்துகொண்டு ரமலான் சிறப்புகள் குறித்து உரையாற்றினாா். இதில் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனா்.