திருநள்ளாறு கோயிலில் வாட்டா் கூலா் இயக்கிவைப்பு
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்காக, சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா காரைக்கால் கிளை சாா்பில் 2 வாட்டா் கூலா் நிறுவப்பட்டுள்ளது.
இதை இயக்கிவைக்கும் நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. கோயில் நிா்வாக அதிகாரி கு. அருணகிரிநாதன் முன்னிலையில் வங்கியின் பிராந்திய துணைப் பொது மேலாளா் ஜி. செல்வலட்சுமி இயந்திரத்தை இயக்கிவைத்தாா்.
நிகழ்வில் வங்கி காரைக்கால் கிளை மேலாளா் எஸ். குருமூா்த்தி உள்ளிட்ட கோயில் ஊழியா்கள், வங்கி ஊழியா்கள் கலந்துகொண்டனா்.