நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
காரைக்காலில் பரவலாக மழை
காரைக்காலில் வியாழக்கிழமை காலை முதல் மிதமான மழை பெய்தது.
கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஏப். 3 முதல் 7-ஆம் தேதி வரை தமிழகத்தில் சில பகுதிகள், புதுச்சேரி, காரைக்காலில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. அதன்படி காரைக்காலில் வியாழக்கிழமை காலை 10 மணிக்குப் பின் மழை பெய்யய் தொடங்கியது. இதனால் நகரப் பகுதிக்கு வந்த மக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டனா். மழையின்போது வணிக நிறுவனங்கள் கொண்ட நகரப் பகுதி சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. மழையால் வெப்பம் ஓரளவுக்கு தணிந்தது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.