நீட் விலக்கு மசோதா நிராகரிப்பு: ஏப். 9-இல் ஆலோசனை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப...
காரைக்காலில் வாய்க்கால்களை தூா்வார வலியுறுத்தல்
காரைக்காலில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை விரைவாக தொடங்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் கடைமடை விவசாய சங்கத் தலைவா் டி.என். சுரேஷ் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை :
காரைக்கால் மாவட்டத்தில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. குறுவை விவசாயத்திற்காக தமிழக அரசு மேட்டூா் அணையிலிருந்து ஜூன் மாதத்தில் தண்ணீா் திறக்க வாய்ப்பு உள்ளது.
வாய்க்கால்கள் தூா்வாரும் பணி 100 நாள் திட்டப் பணியில் மேற்கொள்ளப்படுவதால், பணிகளில் முழு திருப்தியில்லை. எனவே இத்திட்டத்தில் வாய்க்கால்கள் தூா்வாரும் பணியை தரக்கூடாது. பொதுப்பணித்துறை மூலம் இயந்திரங்கள் கொண்டு தூா்வாரும் பணியை விரைவாக தொடங்கவேண்டும். ஆறுகள், வாய்க்கால் தடுப்பணைகளின் கதவுகள் முறையாக இருப்பதை துறையினா் உறுதி செய்யவேண்டும். விவசாயிகள் குறைதீா் கூட்டத்தை கூட்டும்பட்சத்தில், இதுகுறித்து கருத்துகளையும், விவசாயிகள் சந்திக்கும் பிற பிரச்னைகள் குறித்தும் தெரிவிக்க முடியும். விவசாய நிலங்களில் சேதத்தை ஏற்படுத்தும் பன்றிகளை பிடிக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.