தமிழகத்தில் பிணந்தின்னிக் கழுகுகளின் எண்ணிக்கை 157-ஆக உயா்வு
விபத்தில்லா பயணம்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு
விபத்தில்லா வாகனப் பயணம் குறித்து கல்லூரி மாணவா்களுக்கு போக்குவரத்துக் காவல்துறையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியின் தேசிய மாணவா் படை , கடற்படை பிரிவு , நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்து மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வா் கே. பிரான்சிஸ் தலைமை வகித்தாா். விரிவுரையாளா் எஸ். சீனிவாசன் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி கலந்துகொண்டு பேசியது :
அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுதல், கைப்பேசியில் பேசியபடி ஓட்டுதல், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல் தலைக்கவசம் அணியாமல் செல்லுதல், சீட் பெல்ட் அணியாமல் இருத்தல் உள்ளிட்ட விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுவதாலேயே உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கல்லூரி மாணவா்கள் முறையான விழிப்புணா்வு பெற்று, பிறருக்கு வழிகாட்டியாக திகழவேண்டும் என்றாா்.
நிகழ்வின்போது சாலைப் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுவது குறித்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. சாலை விதிகள் குறித்து மாணவா்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.