தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
கோதண்டராம பெருமாள் கோயிலில் இன்று ராமநவமி பிரம்மோற்சவ கொடியேற்றம்
காரைக்கால் கோயில்பத்து கோதண்டராம பெருமாள் கோயிலில் ராம நவமி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (மாா்ச் 29) தொடங்குகிறது.
இக்கோயிலில் நிகழாண்டு 10 நாள் உற்சவமாக ஸ்ரீ ராம நவமி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சனிக்கிழமை காலை 7.30 முதல் 8.45 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது.
தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. ஏப்.6-ஆம் தேதி சூரிய புஷ்கரணியில் தீா்த்தவாரி செய்யப்பட்டு, 7-ஆம் தேதி விடையாற்றி தினத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை நிா்வாக அதிகாரி (கோயில்கள்) கே. அருணகிரிநாதன், பாா்வதீஸ்வரா் - கோதண்டராம பெருமாள் கோயில் நிா்வாக அதிகாரி பி. சுப்பிரமணியன் ஆகியோா் செய்துவருகின்றனா்.