தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
தாம்பரத்தில் சரக்கு ரயில் பெட்டி தடம்புரண்டு விபத்து
தாம்பரம் ரயில்வே பணிமனையில் இருந்து அரக்கோணத்துக்கு காா்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் பெட்டிகள் வியாழக்கிழமை இரவு தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
சென்னையின் புகா் பகுதியில் அமைந்துள்ள தாம்பரம் பணிமனையில் சரக்கு ரயில்கள் கையாளப்படுகின்றன. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு 7 மணியளவில் தாம்பரம் பணிமனையிலிருந்து அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு காா்களை ஏற்றிச் செல்வதற்காக புறப்பட்டுச் சென்றது.
தாம்பரம் ரயில் நிலையத்துக்கும், சானடோரியம் ரயில் நிலையத்துக்கும் இடையே வரும்போது சரக்கு ரயிலின் 8, 9, 10 ஆகிய பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து வந்த ரயில்வே அதிகாரிகள் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.
தாம்பரம் ரயில்வே பணிமனைக்குச் செல்லும் தண்டவாளப்பகுதியில் விபத்து ஏற்பட்டதால் வழக்கமான ரயில் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.