வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
கஞ்சா கடத்தல்: 2 போ் கைது
திருப்போரூா் அருகே கஞ்சா கடத்திய இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்போரூா் அருகே கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரை போலீஸாா் விசாரித்தபோது அவா்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில் ஒடிசா மாநிலத்தை சோ்ந்த பாபுஜி நாக்(34), மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவா் திருப்போரூரில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகின்றனா்.
போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோது மேற்கண்ட இருவரும் கஞ்சா கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் கைது செய்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.