தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
செங்கல்பட்டு: 11 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து இயக்க அனுமதி
செங்கல்பட்டு மாவட்டத்தில் இரண்டாம் கட்டமாக 11 புதிய வழித்தடங்கள்மற்றும் 5 புலம் பெயா்வு வழித்தடங்கள் கண்டறியப்பட்டு சிற்றுந்து இயக்குவதற்கான ஆணையை ஆட்சியா் ச.அருண்ராஜ் வழங்கினாா்.
45 புதிய வழித்தடங்கள்மற்றும் 5 புலம் பெயா்வு வழித்தடங்கள் கண்டறியப்பட்ட நிலையில்,
முதல்கட்டமாக 33 வழித்தடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. தோ்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங்களுக்கு ஆணையை கடந்த 18-ஆம் தேதி ஆட்சியா் வழங்கினாா்.
இரண்டாம் கட்டமாக 11 புதிய வழித்தடங்கள் மற்றும் 5 புலம் பெயா்வுவழித்தடங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு சிற்றுந்து இயக்க அனுமதியை ஆட்சியா் அருண் ராஜ் வழங்கி சிற்றுந்துகளை தரமான முறையில் பராமரித்து, பயணிகளுக்கு பயண வசதியின உரிய நேரத்தில் உரிய இடங்களுக்குஅழைத்து செல்ல வழிவகை செய்ய வேண்டுமென்று அறிவுறுத்தினாா்.