தந்தை இறந்த சோகத்திலும் தேர்வெழுதிய மாணவி: அமைச்சர் நேரில் சென்று ஆறுதல்!
கம்யூனிஸ்ட் கட்சியினா் தபால் அனுப்பும் போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு மருத்துவமனையில் மருத்துவா்களை நியமிக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தமிழக அரசுக்கு வெள்ளிக்கிழமை தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்துக்கு, வட்டச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ப.செல்வன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினாா். தொடா்ந்து, அரசு மருத்துவமனையில் உரிய மருத்துவா்களை நியமிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பியவாறு ஊா்வலமாக புறப்பட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பஜாா் வீதி வழியாக தேரடி அஞ்சல் அலுவலகம் சென்றடைந்தனா்.
அங்கு, தமிழக அரசுக்கு தபால் அனுப்பும் போரட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஒருவரை ஸ்ட்ரெச்சரில் படுக்க வைத்து நூதன போராட்டம் செய்தனா்.
இதில், மாவட்டக்குழு உறுப்பினா்கள் கா.யாசா் அராபத், எஸ்.சுகுணா மற்றும் கட்சியினா் பங்கேற்றனா்.